Vaira Mookuthi
வைரமூக்குத்தி
மங்கையருக்கு குங்குமம் எப்படியோ அப்படியே மூக்குத்தியும் ஒரு மங்கலப் பொருளாக மனம் கவரும் அணியாக விளங்குகிறது. மரகதமேனி அங்கயற்கண்ணியின் ஒளவிடும் மூக்குத்தி பற்றியும்,குமரி எல்லையில் கோலோச்சும் குமரி அன்னையின் சுடர்மிகும் மூக்குத்தி பற்றியும் பல புலவர்கள் பாடியுள்ளார்கள். பாராட்டாத ,அவற்றைக் கண்டு பக்திப் பரவசமடையாத மக்கள் இல்லை என்று கூறலாம். தமிழ் நாவல் உலகில் ஒரு மரகத மூக்குத்தியாக விளங்கும் டாக்டர் லக்ஷ்மி அவர்கள் உணர்ச்சிப்பிழம்பாக இந்த வைர மூக்குத்தியைத் தந்துள்ளார்கள்.
Reviews
There are no reviews yet.