Verukkathakkatha Braminiyam?
வெறுக்கத்தக்கதா பிராமணீயம்?
நிகழ்கால துன்பத்திற்கும், எதிர்கால துன்பத்திற்கும் நிவாரணம் அளிக்கிற நற்கர்மம் எதுவோ, அதை ஆர்வத்துடன் வேண்டுகின்றோம். யாகத்திற்கு வளர்ச்சியை வேண்டுகின்றோம். யாகத்தை செய்பவனுக்கு நற்பயன் கிட்ட வேண்டு கின்றோம். நமக்கு தேவதைகளின் அருள் உண்டா கட்டும். மனித சமூகத்திற்கு க்ஷேமம் உண்டா கட்டும். செடி, கொடிகள் மேலோங்கி வளரட்டும். இரண்டு கால் படைப்புகளிடம் சுபம் உண்டா கட்டும். நான்கு கால் படைப்புகளிடம் சுபம் உண்டாகட்டும்.அமைதி நிலவட்டும்ஆனால் இந்த நாட்டிலே, சமுதாயத்திலே, விஷ வித்துக்களைப் பரப்புகின்ற பிராமணீயத்திற்கு நான் விரோதி. அந்த பிராமணீயத்தைத்தான் நான் எதிர்க்கிறேன். தனிப்பட்ட பிராமணர்களை அல்ல என்று பெரியார் பேசியதை, பெரியாருடைய பொன் மொழிகளை அச்சு ஏற்றப்பட்டு வந்திருப்பதை, அதிலும் விடுதலை அச்சகத்திலே அச்சிட்டு வந்திருப்பதை, நான் படித்துக் காட்டினேன். நான் எடுத்து எழுதினேன். அப்பொழுது என்னுடைய நண்பர் வீரமணி அவர்கள், நான் திரிபுவாதம் செய்கிறேன், பெரியார் அப்படிச் சொல்லவில்லை, பெரியார் தனிப்பட்ட பிராமணரை எதிர்த்தார், பிராமணியத்தை எதிர்த்தார் என்று அவருடைய பொன் மொழிகளையெல்லாம் கருணாநிதி திரித்துப் பேசுவது தவறு என்று வீரமணி சொன்னார். பிராமணர்களில் நல்லவர்கள் இருப்பார்கள். எனவே, பிராமணீயம்தான் கெட்டதே தவிர, தனிப்பட்ட பிராமணர்கள் கெட்டவர்கள் அல்ல, என்று நான் சொன்னதை எதிர்த்து அன்றைக்குச் சொன்னார்.” – திருவாரூரில் ஒரு திருமண விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி பேசிய பேச்சின் ஒரு பகுதியான இது – ஆகஸ்ட் 2-ஆம் தேதி (2000) முரசொலியில் வெளியாகியுள்ளது.
Reviews
There are no reviews yet.