Avani Sundhari
அவனி சுந்தரி
படிக்க ஆரம்பித்தால், கீழே வைக்க மனம் வராத இயல்புடைய நாவல்களை எழுதுவதில் வல்லவர், ஆசிரியர் உயர்திரு. சாண்டில்யன் அவர்கள். வானதியின் புதிய முயற்சியான மக்கள் பதிப்புத் திட்டத்தில், முதலாவதாக பிரபல நாவலாசிரியர் சாண்டில்யன் அவர்களின் சரித்திர நாவலான ‘அவனி. சுந்தரியை வெளியிட்டபொழுது இதற்கு மக்கள் அமோக ஆதரவளித்தார்கள். இப்பொழுது அவனி சுந்தரி மறு பதிப்பாக நூலகங்களில் எல்லாம் வைக்கத் தகுந்த முறையில் சிறந்த பதிப்பாக வெளிவருகிறது. இதில் தமிழ் மணக்கிறது. சரித்திரம் பேசுகிறது. இலக்கியம் இசை பாடுகிறது. கதைக் கரு கலையோடு உருவாக்கப் பட்டுள்ளது. எல்லாம் சேர்ந்து நாவல் நயத்துடனும் படிக்க மிகவும் சுவையாகவும் இருக்கிறது.
Reviews
Clear filtersThere are no reviews yet.