Kadalrani
கடல் ராணி
இந்தக் கதையைப் பற்றிய சரித்திர ஆராய்ச்சியில் இறங்கியபோது, எப்பேர்ப்பட்ட பரம்பரை யில் இந்தப் பாரதம் வந்திருக்கிறது, எத்தகைய அமானுஷ்ய நிகழ்ச்சிகள் அரபிக் கடலில் நடந்திருக்கின்றன என்பதை அறிந்து பிரமித்துப் போனேன்.
சிவாஜி மகாராஜாவின் அற்புத சிருஷ்டி சிந்து துர்க்கம் எனும் கடல்சூழ் கோட்டையும், அதைக் கட்டியபோது சத்ரபதி மற்றக் கூலிகளோடு தானும் ஒரு கூலியாக மண்ணும் கல்லும் சுமந்த விசித்திரமும், எண்ண எண்ண இன்னும் பெருமையாக இருக்கின்றன.
நமது நாட்டு வரலாற்றில் எத்தனை பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன என்று சிந்திக்கும் போது, இத்தனையும் சாதித்த சமுதாயம் இன்று எங்கே போய்விட்டது என்று நினைக்கும்போது, பாரதியார் சொன்ன ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்ற தீர்க்கதரிசன வாக்கியம் எத்தனை உண்மை என்பது புலனாகியது.
Reviews
Clear filtersThere are no reviews yet.