Madhil Mel Maadhu
மதில் மேல் மாது
கிரேஸி மோகன் எழுதிய ‘Situation Comedy’. ஒரு கண் ஆஸ்பத்திரியில் நடக்கும் ஒரு 20 நிமிட குழப்பத்தால் மேல் படிப்பு படித்த மாது ஏழாம் க்ளாஸ் படித்த மைதிலியைத் தன்னைப் போல் படித்த ஜானகி என்று நம்ப, மேல் படிப்பு படித்த ஜானகி ஏழாம் க்ளாஸ் படித்த சீனுவை விரும்ப…அப்பப்பா…. பிரமாதம்.
தேனி என்ற ஊரில் கிராமத்து மக்கள் மத்தியில் இந்த நாடகம் நடந்த பொழுது,மாது தனது படிக்காத மனைவியை விவாகரத்து செய்வேன் என்ற பொழுது வெகுண்டெழுந்த கிராம மக்கள் வெற்றா அவனை என்று அரிவாளுடன் மேடைக்கு வந்ததே இந்த நாடகத்தின் மேன்மைக்கு சிறந்த சான்று. தொலைக்காட்சியில் ‘நில் கவனி கிரேஸி’ மூலம் பிரபலமானது.
Reviews
Clear filtersThere are no reviews yet.