Manithanum Deivamaagalaam
மனிதனும் தெய்வமாகலாம்
முக்தி பெறுவது சுலபம் ‘ என்றார் புத்தர் . ‘ பின் பலர் ஏன் இன்னம் முக்தி பெறவில்லை? என்றார்கள் சீடர்கள். பெறுவது சுலபம் என்றுதான் சொன்னேனே ஒழிய அதற்கான அக்கறை பலருக்கும் உண்டு என்றேனா ? பலருக்கும் அது கிடையாது என்றார் புத்தர். இதுதான் உண்மை. ஒவ்வொரு மனிதனும் இறையின் துளியே. தான் இறை என்ற கடலின் ஒற்றை அலை என்பதை மனிதர்கள் உணருவதே இல்லை. தன்னை இறையாக உணர சராசரி மனிதன்க்குப் பாடத்திட்டம் ஒன்று தேவைப்படுகிறது , அரிச்சுவடி போல், வாய்ப்பாடு போல் சின்ன அளவில் மனிதன் தெய்வமாகும் பாடத்திட்டமாக இந்நூல் பிறந்துள்ளது.
இதை எழுத நீ என்ன இறைவனா? என்று யாராவது கேட்டால் எழுதும்போது இறைவன் … படிக்கும் போது மனிதன் என்பதே என் பதில் . என் தகுதியைப் பற்றிய விசாரணையில் உங்கள் பொன ்னான காலத்தை வீண் செய்யாது உங்களை உயர்த்தும் அல்லது உணர்த்தும் ஆர்வம் இருந்தால் இந்தப் புத்தகம் கண்டிப்பாக உதவும். இந்தப்புத்தகம் எளிய நடையில், தேவியின் பெண்மணி வாசகர்களுக்காக எழுதப்பட்டது.
ஒரு மாதப் பத்திரிகையின் தொடர் கட்டுரை என்கிற எல்லை இருப்பது அதனால் தவிர்க்க முடியாத்தாகிவிட்டது. இதனை நான் எழுத்த் தூண்டிய தேவியின் பெண்மணி ஆசிரியர், நிர்விகத்தினர் அனைவருக்கும் என் நன்றி. தெய்வீக நிலையை எய்த விரும்பும் ஓர் உண்மைச் சாதகனுக்கு இந்நூல் ஒரு syllabus, notes, guide எப்படி வேண்டுமோ அப்படி.
அன்புடன் . சுகி. சிவம்.
Reviews
Clear filtersThere are no reviews yet.