Marriage Made in Saloon
மேரேஜ் மேட் இன் சலூன்
Marriage Made in Heaven, என்ற வரிகளைச் சலூனாக மாற்றிய நகைச்சுவைத் திறன் கிரேஸி மோகனின் தனித்துவம்.
அதுவரை, ஒரு நல்ல நாடகக் குழு என்று பேர் பெற்றிருந்த எங்கள் குழுவிற்கு ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்தும், வசூல் சக்கரவர்த்தி பட்டமும் அளித்த நாடகம் இது. நாடக வரலாற்றிலேயே சிரிப்பை குறைப்பதற்காக சீனை குறைத்த முதல் டைரக்டர் நானாகத் தான் இருப்பேன். வக்கீல் சுப்பு, பார்பராக பிரமாதப்படுத்தியதால் அவருக்கு ‘சலூன் முத்து’ என்ற பட்டப் பெயர் இன்று வரை உள்ளது.
திரு.கிருஷ்ணன் நாடகத்தில் நடித்த அதே பாத்திரத்தில் படத்திலும் சிறப்பு செய்து, வெங்கடேஷிற்கும் பட வாய்ப்புகள் குவிந்து, கிரேஸி வெங்கடேஷ் என்று பிரபலமானார்.
Reviews
Clear filtersThere are no reviews yet.