Naga Deepam
நாக தீபம்
கர்னல் ஜேம்ஸ் டாட் எழுதிய ராஜபுதன வரலாற்று ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்த போது ராணா அமரசிம்மன் ஜஹாங்கீருக்குப் பணிந்து சமாதானம் செய்துகொண்ட சமயத்தில், மேவார் வம்சத்தில் பரம்பரையாக இருந்த, விலைமதிக்க முடியாத சிவப்பு இரத்தினம் ஒன்றை மொகலாய சக்ரவர்த்திக்குக் கொடுத்ததாக ஒரு குறிப்பு இருந்தது.
அந்தக் குறிப் பைத் தொடர்ந்து மொகலாய ராஜபுதனப் போர்களைப் பற்றி ஆராய்ந்தபோது வரலாற்றின் அந்தப் பகுதி மிகச் சுவையாக இருந்தது. நல்லதொரு கதைக்கும் இடம் இருந்தது.அந்த வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு ‘நாகதீபத்தின் கதை புனையப்பட்டது.
இக் கதையின் கதாநாயகியான ராஜபுத்திரியைத் தவிர மற்ற எல்லோ ரும் வரலாற்றில் வாழ்ந்தவர்கள்! இக்கதை இலக்கிய மாதப் பத்திரிகையான ‘அமுதசுரபி’யில் ஒன்றரை வருட காலம் தொடர்ச்சியாக வெளிவந்தது. இதைத் தொடர் கதையாக வெளியிட்ட அமுதசுரபி நிர்வாகி களுக்கும், புத்தக ரூபத்தில் வெளிக் கொண்டு வர முன்வந்த வானதி பதிப்பகத்தாருக்கும் என் நன்றி.
Reviews
Clear filtersThere are no reviews yet.