Thavo Oru Thangakathavu
தாவோ ஒரு தங்கக் கதவு
ஆன்மிக நூல்களிலேயே மிகச் சிறியது இதுதான். பல கோடி ரோஜா மலர்களில் இருந்து எடுக்கப் பட்ட சில ரோஜாச் சாறுதான் இந்த நூல் என்று தாவோவை ஓஷோ அறிமுகப்படுத்தும் போது அவர் நமக்கு அளிக்கும் பரிசின் மகத்துவம் புரிகிறது.எங்களைப் பார்க்கும் போது உங்களுக்குச் சலிப்பாக இல்லையா ? எங்கள் முட்டாள்தனங்களைப் பார்க்கும் போது, உங்களுக்கு வெறுப்பாக இல்லையா ? இப்படியும் ஒரு கேள்வி ஓஷோவிடம் கேட்கப்பட்டது.
இந்தக் கேள்விக்கான பதிலில் தான் ஓஷோ நம் மேல் கொண்டிருக்கும் காதல் விளங்குகிறது, அந்தக் காதலின் விளைவுதான் இந்தப் புத்தகம். ஓஷோ , நீங்கள் யார் ? இந்த மாதிரி கேள்வியை ஓஷோவால் மட்டுமே எதிர்கொள்ள முடியும். அவரால் மட்டுமே இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் போதுகூட நமது ஆன்மிக உணர்வை வளர்க்க முடியும்.
இன்னும் சில முத்துக்கள்.. வன்முறையை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வழி.. எந்த ஒரு சமுதாயத்தில் செக்ஸ் ஆசைகள் ஒடுக்கப்படவில்லையோ எந்த ஒரு சமுதாயத்தில் ஒரு மனிதன் தனது செக்ஸ் வாழ்க்கையைச் சுதந்திரமாக வாழமுடியுமோ, அந்த சமுதாயத்தில் கொஞ்சம் கூட வன்முறை இருக்காது.தங்கக்கதவு உங்களுக்காக நீங்கள் தட்டாமலேயே திறக்கப்பட்டிருக்கிறது. உள்ளே இருக்கும் உன்னதமான உலகம் உங்கள் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.
Reviews
Clear filtersThere are no reviews yet.