Crazy Kishkindha
கிரேஸி கிஷ்கிந்தா
கிரேஸி மோகனுக்கு, இதிகாச புராணங்களில் இருந்த மிகுந்த ஆர்வம் மற்றும் அறிவு விளைவே இந்த நாடகம். ஹரிகதா மேதையான என் தந்தையார் ப்ரும்மஸ்ரீ கூ.கு. பாலகிருஷ்ண சாஸ்திரிகளை அணுகி ‘வாலி வதம்’ பற்றிய பல குறிப்புகளை அள்ளிக் கொண்டார் மோகன்.
குறிப்பாக, இராமனால் கொல்லப்பட்ட வாலியே நீதிமன்றத்தில் நேரில் தோன்றி இந்த வழக்கிற்குத் தீர்ப்பைக் கொடுக்கிறார் என்ற கூகுஆயின் கருத்தை ஏற்றதோடு, வாலியாகவும் நடித்தார் கிரேஸி மோகன்.
வாலி சார்பில் வாதாடும் வழக்கறிஞராக, நிஜ வக்கீல், எங்கள் குழு திரு. சுப்பு அவர்களும், இராமபிரானுக்கு சாதகமாக வாதிடும் வக்கீல் வேடத்தில் திரு மாது பாலாஜியும் நடித்திருந்தார்கள்.
Reviews
Clear filtersThere are no reviews yet.