Gethaa Ubhadesam
கீதா உபதேசம்
தில்லை ராஜன் அவர்களுக்காக Crazy மோகன் எழுதியது. திரு ராஜன், திருமதி மனோரமா அவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆச்சியால் நடிக்க முடியாமல் போகவே திரு ராஜன் அவர்கள் திருமதி சுமித்ராவை வைத்து இயக்கி, தானும் கதாநாயகனாக நடித்த நாடகம்தான் கீதா உபதேசம்.
வாழ்க்கையில் சகலவிதமான செளகரியங்களையும் திகட்டத் திகட்ட அனுபவித்து அதனால் வாழ்க்கையே வெறுக்கும் கீதா, வாழ்க்கையில் எல்லா திசையிலும் பிரச்சனைகளை மட்டுமே எதிர்கொள்ளும் ஒருவனை அவன் வாழ்வை முடித்துக்கொள்ளும் (கொல்லும்) தருணத்தில் சந்திக்கிறாள்.
கீதாவின் உபதேசங்களை ஏற்று அவன் படிப்படியாக வாழ்வை நற்பாதைக்குத் திசைதிருப்பி, நல்வாழ்வை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கிறான். கீதாவின் காதலை ஏற்கக் கூடிய சூழலில் இல்லை என்றும்,வேறு ஒருத்தியைக் காதலிப்பதாகவும், கீதாவே தன் திருமண வாழ்வை ஆரம்பித்து வைத்து வாழ்த்துமாறும் கேட்டும்கொள்கிறான். இந்த அற்புதமான நாடகம் 100 முறைக்கு மேல் அரங்கேறியது.
கிரேஸி மோகன்
Reviews
Clear filtersThere are no reviews yet.