Satellite Samiyar
சாடிலைட் சாமியார்
1995-96 சேட்டிலைட் டி.வி., வீடிேயா லைப்ரரிகள், போலி சாமியார்கள் – இவை மூன்Raiயும் இணைத்துச் சிரிப்பு ரசிகர்களுக்குப் பெரும் தீனி போட்டார் கிரேஸி மோகன்.
தெய்வ பக்தி… துறவிகள் பக்தி… தேவை… ஆனால் அவையே அதீதமானால்…. அப்படிப்பட்ட ஒரு மனைவியிடம் மாட்டிக்கொண்டு தினம் திணறும் மாது… புதிதாக ஒரு சாமியார் தங்கள் வீட்டிலேயே தங்க வருவதாக அவள் கூற…. மாது அவளுக்குத் தெரியாமல் அந்த சாமியாரை ரயில் ஸ்டேஷனிலேயே பிடித்து, தன் வீடியோ லைப்ரரிக்கு அழைத்துவரும் வேளை… அந்த வீடியோ லைப்ரரியில் போலீஸ் ரைடு வர… மாது சாமியார் இருவரும் கைதாகிறார்கள்…
பிறகு மாது சாமியாராகவும் சாமியார் மாதுவாகவும் நடிக்க வேண்டிய சிக்கல் தருணங்கள்…
எங்கள் ‘நில் கவனி கிரேஸீ’ டி.வி. தொடர் சன் டி.வி.யில் ஆரம்பித்த போது இந்த ‘சேட்டிலைட் சாமியார்’ கதைதான் முதலில் சக்கை போடு பாேட்டது.
Reviews
Clear filtersThere are no reviews yet.